‘வழக்கமான பரிசோதனை தான்; வதந்திகளை நம்ப வேண்டாம்’ - உடல் நலம் குறித்து ரத்தன் டாடா

ரத்தன் டாடா
ரத்தன் டாடா
Updated on
1 min read

மும்பை: ரத்த அழுத்த குறைவால் மருத்துவமனையில் தான் அனுமதிக்கப்பட்டதாக வெளியான தகவலை ரத்தன் டாடா மறுத்துள்ளார். 86 வயதான அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை பின்னிரவு அனுமதிக்கப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில், அது குறித்து இன்ஸ்டாகிராம் தளத்தில் விளக்கம் கொடுத்துள்ளார் டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா.

“எனது உடல்நிலை குறித்து சமீபத்தில் வெளியான வதந்தி குறித்து நான் அறிவேன். அது முற்றிலும் ஆதாரமற்றவை என அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறேன். கவலை கொள்ள வேண்டாம். நான் சிறந்த மனநிலையுடன் உள்ளேன்.

எனது வயது காரணமாக மேற்கொள்ளப்பட்ட வழக்கமான மருத்துவ பரிசோதனை செய்து கொண்டேன்” என அவர் கூறியுள்ளார். ‘என்னை எண்ணத்தில் கொண்டதற்கு நன்றி’ என எக்ஸ் தளத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் அப்ஸ்டாக்ஸ் பங்கு புரோக்கிங் ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் தனது 5 சதவீத பங்கினை விற்பனை செய்தார். அவரது ஆரம்ப முதலீட்டில் பல்லாயிரம் மடங்கு சதவீதம் வருவாயை ஈட்டி இருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in