அமிர்தசரஸ் - நான்டெட் வரை செல்லும் சச்கண்ட் விரைவு ரயிலில் 29 ஆண்டாக இலவச உணவு

அமிர்தசரஸ் - நான்டெட் வரை செல்லும் சச்கண்ட் விரைவு ரயிலில் 29 ஆண்டாக இலவச உணவு
Updated on
1 min read

அமிர்தசரஸ்: அமிர்தசரஸில் இருந்து நான்டெட் செல்லும் சச்கண்ட் விரைவு ரயிலில்29 ஆண்டுகளாக பயணிகளுக்கு இலவச உணவு வழங்கப்படுகிறது.

ரயில்களில் பயணிகளின் வசதிக்காக உணவகம் (பேன்ட்ரி) செயல்படுகிறது. இதில் வழங்கப்படும் உணவுக்கு பயணிகள் பணம் செலுத்த வேண்டும். அத்துடன் ரயில் நிலையங்களிலும் உணவுகள் விற்கப்படுகின்றன. ஆனால், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் இருந்து மகாராஷ்டிர மாநிலம் நான்டெட் வரைசெல்லும் சச்கண்ட் விரைவு ரயிலில் (12715) பயணிகளுக்கு உணவு இலவசமாகவே வழங்கப்படுகிறது.

இந்த நடைமுறை பல ஆண்டுகளாகவே சச்கண்ட் விரைவில் ரயிலில் உள்ளது. பயணிகள் உணவுக்காக கவலைப்பட தேவையில்லை. மொத்தம் 39 ரயில் நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்கிறது. சச்கண்ட் ரயிலில் பேன்ட்ரி இல்லாவிட்டாலும், இந்த ரயில் செல்லும் வழியில் 6 ரயில் நிலையங்களில் சமைத்து பயணிகளுக்கு இலவச உணவு வழங்கப்படுகிறது. பயணிகள் அனைவரும் இலவச உணவு பெறுவதற்காக இந்த ரயில் நிலையங்களில் நீண்ட நேரம் ரயில் நிறுத்தப்படுகிறது.

அமிர்தசரஸில் உள்ள சீக்கியர்களின் புனித தலமான ஸ்ரீஹர்மந்திர் சாஹிப் மற்றும் நான்டெட்டில் உள்ள ஸ்ரீஹசூர் சாஹிப் தலத்தில் இந்த சச்கண்ட் எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்கிறது. இந்த ரயில் 2,081 கி.மீ. தூரம் பயணிக்கிறது. கடந்த 1995-ம் ஆண்டு முதல் தொடங்கப்பட்ட இந்த இலவச உணவு விநியோகம் 29 ஆண்டுகளாக தொடர்கிறது. பயணிகள் தங்கள் பாத்திரங்களை கொண்டு வந்து இலவச உணவை பெற்றுச் செல்கின்றனர். தினமும் 2,000-க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு இலவச உணவு வழங்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in