Published : 04 Oct 2024 05:07 AM
Last Updated : 04 Oct 2024 05:07 AM
சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரம் நேற்றுமாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. அங்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
ஹரியானாவில் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் நாளை நடைபெறுகிறது. காலை 7 மணி முதல்மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். இங்கு தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இங்கு2 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக 20,629 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு 1031 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 101 பேர் பெண்கள்.
இங்கு கடந்த சில நாட்களாக பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் யமுனா நகர் மாவட்டத்தில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பாஜக மூத்த தலைவர்கள் அனுராக் தாக்கூர், ஹேமா மாலினி ஆகியோர் குருஷேத்ராவில் தீவிர பிரச்சாரம் செய்தனர். காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பிவானி மற்றும் ஜிந்த் மாவட்டத்தில் பிரச்சாரம் செய்தார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சர்க்கி தத்ரி பகுதியில் நடைபெற்ற பிரச்சார பேரணியில் கலந்து கொண்டார். பிரதமர் மோடி இங்கு நான்கு பிரச்சார கூட்டங்களில் பங்கேற்றார்.
கடைசிநாள் பிரச்சாரமான நேற்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா ஆகியோர், உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் பிரச்சாரத்தில் பங்கேற்றனர். இந்த அனல் பறக்கும் பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது.
தேர்தல் பிரச்சார காலம் முடிவடைந்ததால், வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் ஏஜென்ட்டுகள் தவிர வாக்காளர்கள் அல்லாத அனைத்து அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், மற்றும்அரசியல் கட்சி தலைவர்கள் தொகுதிகளை விட்டு வெளியேறும்படி ஹரியானா தலைமை தேர்தல் ஆணையர் பங்கஜ் அகர்வால்அறிவுறுத்தியுள்ளார். தேர்தல் முடிந்தபின் அரை மணி நேரத்துக்கு பின்பே தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை வெளியிட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் தேர்தல்களில் பதிவான வாக்குகள் வரும் 8-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின்றன.
காங்கிரஸில் பாஜக தலைவர்: ஹரியானாவில் சட்டப்பேரவை தேர்தல் நாளை நாடைபெறவுள்ள நிலையில் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான அசோக் தன்வர் காங்கிரஸ் கட்சியில் நேற்று இணைந்தார். மகேந்திரகர் மாவட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இவர் காங்கிரஸில் மீண்டும் இணைந்தார். அதற்கு சற்று நேரத்துக்கு முன்பாக சபிதான் சட்டப்பேரவை தொகுதியில் பாஜகவேட்பாளருக்கு ஆதரவாக இவர் வாக்குச் சேகரித்தார். இவர் கடந்தஜனவரி மாதம் தான் ஆம் ஆத்மிகட்சியில் இருந்து விலகி பாஜக.,வில் இணைந்தார். ஹரியானா மாநிலத்தில் முன்னாள் காங்கிரஸ் தலைவராக இருந்த அசோக் தன்வர், திரிணமூல், ஆம் ஆத்மி, பாஜக ஆகிய கட்சிகளில் சேர்ந்து விலகிய பின் தற்போது மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT