மேற்கு வங்கத்தில் 11 இடங்களில் என்ஐஏ திடீர் சோதனை

மேற்கு வங்கத்தில் 11 இடங்களில் என்ஐஏ திடீர் சோதனை
Updated on
1 min read

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் மாவோயிஸ்ட் அமைப்பு மீண்டும் தீவிரமாக செயல்பட சதி திட்டம் தீட்டியுள்ளதாக கூறப்பட்டுவந்த நிலையில், அம்மாநிலத்தில் 11 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) நேற்றுமுன்தினம் சோதனை நடத்தியது. கொல்கத்தா, பர்கானாஸ், அசன்சோல், ஹவுரா, நாடியா உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

மாவோயிஸ்ட் அமைப்போடு தொடர்புடைய நபர்களின் வீடுகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின்போது முக்கியமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.

என்ஐஏ கூறுகையில், “மாவோயிஸ்ட் சதி தொடர்பாக 2022-ம்ஏப்ரலில் பதியப்பட்ட வழக்குத்தொடர்பாக தற்போதைய சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இதுவரை 6 பேரை கைது செய்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in