Published : 03 Oct 2024 06:13 AM
Last Updated : 03 Oct 2024 06:13 AM
அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸை சேர்ந்த பெண் மந்தீப் கவுர். இவரது கணவர், தங்க நகை நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த திங்கள் கிழமை, மந்தீப் கவுர் குழந்தைகளுடன் தனியாக இருந்த சமயத்தில், மூன்று முகமூடிகொள்ளையர்கள் அவரது வீட்டுக்குச் சென்றனர்.
கொள்ளையர்கள் வருவதை அறிந்த மந்தீப் கவுர், வேகமாக ஒடிச் சென்று கதவைத் தாழிடமுயன்றார். மறுபக்கம் கொள்ளையர்கள் கதவைத் தள்ளி வீட்டுக்குள் நுழைய முயன்றனர். எனினும்,தன்னுடைய முழு பலத்தையும் செலுத்தி மந்தீப் கவுர் கதவின் தாழ்பாளைப் பூட்டினார். பிறகு அருகில் இருந்த சோபாவை எடுத்து கதவோடு சேர்த்து வைத்தார். மேலும் அவர் கூச்சலிடத் தொடங்கிய நிலையில் கொள்ளையர்கள் அந்த வீட்டைவிட்டு ஓடினர். இந்தக் காட்சிகள் அனைத்தும் அவரது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து மந்தீப்கவுர் கூறுகையில், “மூன்று பேர்முகமூடி அணிந்து வீட்டுக்குள்நுழைய முயன்றபோது பெரும் போராட்டத்துக்குப் பிறகு கதவைதாழிட்டேன். பின்னர் அந்தக் கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவத்தைப் பார்த்த என்குழந்தைகள் அதிர்ச்சியில் உள்ளனர். இந்தக் கொள்ளையர்களை கைது செய்து தண்டிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
Breaking
A fearless woman from Punjab single-handedly fended off three robbers attempting to steal her valuables!
Her bravery has inspired many. pic.twitter.com/DOrz5S4U4X— Trends In India (@_India_trends_) October 2, 2024
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT