Published : 02 Oct 2024 05:22 AM
Last Updated : 02 Oct 2024 05:22 AM

விமான விபத்தில் இறந்த ராணுவ வீரரின் உடல் 56 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிப்பு: சோகம் கலந்த மகிழ்ச்சியில் குடும்பத்தினர்

பிரதிநிதித்துவப் படம்

பத்தனம்திட்டா: இமாச்சலப் பிரதேசத்தின் ரோதங் கணவாய் பகுதியில் அடல் பிஹாரி வாஜ்பாய் மலையேற்ற பயிற்சி மைய வீரர்கள் கடந்த 2003-ம் ஆண்டு பயிற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது விமானப்படை விமா னம் ஒன்றின் உடைந்த பாகங்களை கண்டுபிடித்தனர். அது கடந்த 1968-ம் ஆண்டு விபத்துக்குள்ளான விமானப்படையின் ஏஎன்12 ரக போக்குவரத்து விமானத்தின் பாகம் என்பது உறுதி செய்யப்பட்டது. அப்போது நடந்த விபத்தில் அந்தவிமானத்தில் பயணம் செய்த 102 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். அந்த விமானம் சண்டிகரிலிருந்து காஷ்மீரின் லே பகுதிக்கு சென்றது.

அதன்பின் அப்பகுதியில் இந்திய ராணுவத்தின் டோக்ரா ஸ்கவுட் குழுவினர் கடந்த 2005, 2006, 2013 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் ராணு வத்தின் டோக்ரா ஸ்கவுட்ஸ் மலையேற்ற வீரர்கள் மற்றும் திரங்கா மலைப்பகுதி மீட்பு குழுவினர் இப்பகுதியில் மீண்டும் தேடுல் பணியில் ஈடுபட்டனர். அப்போது 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. அதில் ஒருவரது உடல் ராணுவ வீரர் தாமஸ் செரியனின் உடல் என தெரியவந்தது. இது குறித்துஅவரது சொந்த ஊரான கேரளாவின் பத்தனம்திட்டாவில் உள்ள அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இத்தகவல் அவர்களுக்கு ஆச்சரியம் மற்றும் மகிழ்ச்சியை அளித்தாலும், உணர்வுபூர்வமான சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தாமஸ் செரியனின்தங்கை கூறுகையில், ‘‘இந்த தகவல்எங்களுக்கு மகிழ்ச்சியையும் அதே நேரத்தில் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எனது சகோதரருக்கு முறையாக இறுதிச்சடங்கு செய்யும் வாய்ப்பு கிடைக்கும் என நாங்கள் நினைக்கவில்லை. எனது சகோதரர் உடல் கிடைத்ததை கடவுளின் ஆசிர்வாதமாக கருது கிறோம். கடவுளுக்கு நன்றி. உள்ளூரில் அவரது உடலுக்கு இறுதிச் சடங்கு செய்து அடக்கம் செய்வோம்’’ என்றார்.

தாமஸ் செரியனின் சகோதரர் கூறுகையில், ‘‘ எனது சகோதரரின் உடலை மீட்ட ராணுவத்துக்கும், வீரர்களுக்கு இந்தளவு மரியாதை செலுத்தும் தேசத்துக்கும் நன்றி. எனது சகோதரரின் போட்டோ கூட எங்களிடம் இல்லை. பழைய ஆவணங்களில் இருந்து எனது சகோதரரின் போட்டோவை ராணுவம் பெற்று தரும் என நம்புகிறோம்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x