போலி பாஸ்போர்ட் மூலம் தங்கிய பாகிஸ்தானியர் குடும்பம் பெங்களூருவில் கைது

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

பெங்களூரு: மத்திய உளவுத்துறை பெங்களூருவில் உள்ள ஜிகனியில் பாகிஸ்தானியர் ஒருவர் குடும்பத்துடன் வசிப்பதாக பெங்களூரு போலீஸாருக்கு தகவல் அளித்தது.

இதையடுத்து போலீஸார் அங்கு சந்தேகத்துக்குரிய நபர்களின் வீடுகளுக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது 48வயதான பாகிஸ்தானியர் ஒருவரும், அவரது மனைவி, மாமனார்,மாமியார் ஆகியோர் சிக்கினர்.

போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், 48 வயதான அந்த நபரின்உண்மையான பெயர் ரஷித் அலிசித்திக் என தெரியவந்தது. பாகிஸ்தானில் காராச்சியை சேர்ந்த இவர்,கடந்த 2013-ம் ஆண்டு வங்கதேசத் தில் உள்ள டாக்காவுக்கு சென்று தன் காதலியை திருமணம் செய்து கொண்டார். அங்கிருந்து தனது மனைவி, மாமனார், மாமியார் ஆகியோருடன் 2014-ல் போலி பாஸ்போர்ட் மூலம் சட்டவிரோதமாக டெல்லிக்கு சென்றார். அங்கு தங்களது பெயர்களை இந்து மத அடையாள பெயர்களாக மாற்றிக்கொண்டு 2018-ம் ஆண்டு பெங்களூருவுக்கு குடிபெயர்ந்தார்.உள்ளூர் முகவர் ஒருவரின் உதவியுடன் ஜிகனியில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்துள்ளார்.

இதுகுறித்து கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி பரமேஸ்வரா கூறுகையில், ‘‘இந்த விவகாரம் குறித்து போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். அவர்கள் சுமார் 10 ஆண்டுகளாக நமது நாட்டில் சட்ட விரோதமாக வசித்து வந்துள்ளனர். இதுகுறித்து மத்திய உளவுத்துறை அதிகாரிகளுடன் இணைந்து பெங்களூரு போலீஸார் விசாரித்து வருகிறார்கள்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in