பாகிஸ்தானுக்கு அருண் ஜேட்லி எச்சரிக்கை

பாகிஸ்தானுக்கு அருண் ஜேட்லி எச்சரிக்கை
Updated on
1 min read

பாகிஸ்தான் ராணுவ தாக்குதல் குறித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி விசாகப்பட்டினத்தில் நிருபர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல்கள் அதிகரித்துள்ளன. அவர்களுக்கு இந்திய ராணுவமும் எல்லை பாதுகாப்புப் படையும் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. நமது ராணுவம் எல்லையில் உஷார் நிலையில் உள்ளது. பாகிஸ்தான் வரம்பு மீறினால் தகுந்த பாடம் கற்பிக்கப்படும் என்றார்.

ஜம்மு மாவட்டத்தில் சாக்லா பகுதி யில் 50 மீட்டர் தொலைவுக்கு அமைக் கப்பட்டிருந்த சுரங்கப் பாதையை இந்திய வீரர்கள் அண்மையில் கண்டுபிடித்தனர்.

இதுகுறித்து ராணுவ வட்டாரங் கள் கூறியபோது, அந்தப் பகுதி முழுமையாக ராணுவ கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது, சிறிது தொலைவு சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. அண்மையில் பெய்த மழையில் சுரங்கப்பாதை அழிந்துவிட்டது, இந்த விவகாரம் குறித்தும் பாகிஸ்தான் ராணுவத்திடம் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in