அருணாச்சல் மலைக்கு தலாய் லாமா பெயர்: சீனா எதிர்ப்பு

அருணாச்சல் மலைக்கு தலாய் லாமா பெயர்: சீனா எதிர்ப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: அருணாச்சல பிரதேசத்தில் இதுவரை செல்லாத மலைச்சிகரம் ஒன்றுக்கு தேசிய மலையேற்ற பயிற்சி நிறுவனத்தின் (நிமஸ்) ஒரு குழுவினர் சாகசப் பயணம் மேற்கொண்டனர். அவர்கள் வெற்றிகரமாக 20,942 அடி உயரத்தில் உள்ள அதன் உச்சியை அடைந்தனர்.

இதையடுத்து அந்த சிகரத் துக்கு சாங்யாங் கியாட்சோ என ஆறாவது தலாய் லாமா பெயரை சூட்டினர். இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் கூறுகையில், ‘‘ஜாங்னான் (அருணாச்சல பிரதேசம்) சீனாவுக்குஉரிய பகுதியாகும். அப்பகுதியில் உள்ள இடத்துக்கு இந்தியாபெயர் சூட்டுவது சட்டவிரோதம். இதுவே சீனாவின் நிலைப்பாடாகும்’’ என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in