இந்தியா
200 கிராம் தங்கத்தில் புடவை நெய்த தெலங்கானா நெசவாளி
ஹைதராபாத்: தெலங்கானாவில், ராஜண்ண சிரிசில்லா மாவட்டத்தை சேர்ந்தவர் விஜயகுமார். நெசவாளியான இவர், ஏற்கெனவே பல விஐபிக்களின் புகைப்படங்கள், பாரதம், ராமாயணம், ஸ்ரீ கிருஷ்ணர் படங்கள் போட்ட பட்டு புடவைகளை நெய்து பலரிடம் பாராட்டுகளை பெற்றுள்ளார்.
இந்நிலையில், ஹைதரா பாத்தை சேர்ந்த ஒரு தொழிலதி பரின் மகள் திருமணத்துக்காக 200 கிராம் தங்கத்தில் 49 அங்குலம் அகலத்தில், ஐந்தரை மீட்டர் நீளத்தில் மிக அழகான தங்க புடவையை 900 கிராம் எடையில் தயாரித்துள்ளார். இந்த பட்டு புடவையின் விலை ரூ.18 லட்சம் என விஜயகுமார் கூறினார்.
