

அமராவதி: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த ஆர்.கிருஷ்ணய்யா தற்போது தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதற்கான கடிதத்தை கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டிக்கும், மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கருக்கும் அனுப்பி வைத்தார். அவரது ராஜினாமாவை ஜெகதீப் தன்கர் ஏற்றுக்கொண்டதாகவும் அறிவித்துள்ளார். இதனால், மாநிலங்களவையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் பலம் 11-லிருந்து 8 ஆக குறைந்துள்ளது.ஏற்கெனவே ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்களான மோபிதேவி வெங்கட்ரமணா மற்றும் மஸ்தான் ராவ் ஆகியோர் ராஜினாமா செய்து விட்டனர். இதில் தற்போது பிற்படுத்தப்பட்ட பிரிவினர் சங்க தேசிய தலைவரான ஆர். கிருஷ்ணய்யாவும் ராஜினாமா செய்தார்.