Published : 10 Jun 2018 09:58 AM
Last Updated : 10 Jun 2018 09:58 AM

காங்., மஜத எம்எல்ஏக்கள் பாஜகவில் சேர ஆர்வம்: எடியூரப்பா தகவல்

கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சியில் உள்ளது.

அமைச்சர் பதவி கிடைக்காத இரு கட்சிகளையும் சேர்ந்த எம்எல்ஏக்கள் சிலர் அதிருப்தியில் உள்ளனர். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலருக்கு அமைச்சர் பதவி கோரி அவர்களது ஆதரவாளர்கள் சமீபத்தில் போராட்டம் நடத்தியதால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், பெங்களூரில் நேற்று பாஜக கூட்டத்தில் பேசிய முன்னாள் முதல்வர் எடியூரப்பா, ‘‘காங்கிரஸ் - மஜத அரசு எவ்வளவு நாள் நீடிக்கும் என்று தெரியாது. காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகளின் அதிருப்தி எம்எல்ஏக்கள் பலர் பாஜக வில் சேர ஆர்வமாக உள்ளனர். 104 எம்எல்ஏக்களுடன் சட்டப்பேரவையில் பாஜக முழு பலத்துடன் உள்ளது. அரசு எத்தனை நாள் நீடிக்கும் என்பது பற்றி கவலைப்படாமல் சிறந்த எதிர்க்கட்சியாக பணியாற்ற வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x