சனாதன தர்ம ரக்‌ஷனா வாரியம் அவசியம்: பவன் கல்யாண் கருத்து

சனாதன தர்ம ரக்‌ஷனா வாரியம் அவசியம்: பவன் கல்யாண் கருத்து
Updated on
1 min read

அமராவதி: சனாதன தர்ம ரக்‌ஷனா வாரியம் அமைக்க வேண்டும் என ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் கூறியுள்ளார்.

அவர் தனது சமூக வலை தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: லட்டு பிரசாதம் தயாரித்த நெய்யில் விலங்குகளின் கொழுப்பா? இது மன்னிக்க முடியாத குற்றம்.ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவினர் தான் இதற்கு பதில் அளிக்க வேண்டும்.

இந்து கோயில்களில் நடக்கும் பணிகளை மேற்பார்வையிட தேசிய அளவில் சனாதன தர்ம ரக்‌ஷனா வாரியம் அவசியம். சனாதனத்திற்கு எங்கு எப்பிரச்சனை நடந்தாலும் நாம் அனைவரும் ஒன்று திரண்டு போராட வேண்டும். இவ்வாறு பவன் கல்யாண் பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in