Published : 19 Aug 2014 10:05 AM
Last Updated : 19 Aug 2014 10:05 AM

பேஸ்புக்கில் லஞ்சம் பெற்றவர்களின் புகைப்படம்: மகாராஷ்டிர போலீஸ் திட்டம்

லஞ்சம் வாங்கியதற்காக பிடி பட்டவர்களின் புகைப்படத்தை பேஸ்புக்கில் வெளியிட மகாராஷ்டிர ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

இது தொடர்பாக ஊழல் தடுப்புத் துறை தலைவர் பிரவீண் தீட்சித் கூறும்போது, ``ஊழலுக்கு எதிரான எங்களின் நடவடிக்கை யைத் தீவிரப்படுத்தும் விதத்தில், பேஸ்புக்கைப் பயன்படுத்த திட்ட மிட்டுள்ளோம். லஞ்சம் பெற்ற குற்றவாளிகளின் புகைப்படம் பேஸ்புக் தளத்தில் வெளியிடப் படும். லஞ்சத் தொகையின் அளவு, குற்றவாளியிடமிருந்து கைப்பற்றப்பட்ட மதிப்பு மிக்க பொருள்கள், ஆவணங்கள் உள் ளிட்டவையும் வெளியிடப்படும். இதன் மூலம் லஞ்சம் வாங்கி பிடிபட்டவர்களின் மதிப்பு சமூகத் தில் சரியும். லஞ்சம் வாங்கும் எண்ணத்தைத் தவிர்க்கும்” என்றார்.

நடப்பாண்டு, 774 லஞ்ச சம்பவங்களை மகாராஷ்டிர லஞ்ச ஒழிப்புத் துறை பொறி வைத்துப் பிடித்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 114 சதவீதம் அதிகம். இச்சம்பவங்களில் மொத்தம் 1009 அரசு அதிகாரிகள் மற்றும் அவர்களுக்கு உத விய வெளிநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில், 348 லஞ்ச சம்பவங்கள் பிடிபட்டுள்ளன. இதில், 452 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஏற்கெனவே, லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் இணையதளத்தில், பிடிபட்டவர்களின் புகைப் படங்கள் கடந்த 2 மாதங்களாக வெளியிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x