Last Updated : 09 Aug, 2014 02:32 PM

 

Published : 09 Aug 2014 02:32 PM
Last Updated : 09 Aug 2014 02:32 PM

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் புதிய வகை மீன்; அரிய ரக மரம் கண்டுபிடிப்பு

மேற்கு தொடர்ச்சி மலையின் பன்முகங்களைக் கண்டறியும் நோக்கத்துடன் அங்கு ஆய்வு செய்த ஆய்வாளர்கள், ஓர் அரிய ரக மரத்தையும், ஒரு புதிய வகை மீன் இனத்தையும், கண்டுப்பிடித்துள்ளனர்.

திருச்சூரில் உள்ள மருந்துவ குண தாவரங்கள் ஆய்வுக்கூடத்தைச் (Centre for Medicinal Plants Research - CMPR) சேர்ந்த ஆய்வாளர்கள், இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளனர்.

கேரள மாநிலத்தில் வயநாடு பகுதியிலுள்ள கபனி ஆற்றில் புதிய வகை மீன் ஒன்றை ஆய்வாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர். அவர்கள் முதிகுலம் உயர் பகுதி பன்வகைமை பகுதியில் அரிய ரக மரத்தையும் கண்டறிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2012-ஆண்டு ஜனவரி மாதம், கொல்லம் பகுதியில் அரசு கல்லூரியைச் சேர்ந்த துணைப் பேராசிரியர் மாத்யூ ப்லாமூட்டல் என்பவர் கண்டுபிடித்தார். இதனை அறிவியல் அடிப்படையிலும், மற்ற வகை மீன் இனங்களுடன் ஒப்பிட்டு பார்த்தும் ஆய்வு செய்ததில், இது புதிய வகை மீன் இனம் என்று தெரிய வந்துள்ளது., ‘Pristolepis pentacanth’ என்று அறிவியல் பெயரிடப்பட்டுள்ள இந்த மீனை, அங்குள்ள பொதுமக்கள் ‘Aattuchemballi’ என்று அழைந்துவருகின்றன. இந்த மீன் வகை சாப்பிடுவதற்கு ஏற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்பல் நிறத்துடன் கூடிய பச்சை வண்ணம்கொண்ட இந்த மீன், சிவப்பு நிறம் கலந்த ஆரஞ்சு வண்ணத்தில் முதுகு துடுப்பைக்கொண்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பு குறித்து, சர்வதேச அறிவியல் ஆய்வு இதழில் வெளிவந்துள்ளது.

நீரிழிவு நோய் எதிர்ப்பு சக்திக்கொண்ட அரிய வகை மரம்

‘Gnidia glauca var. sisparensi’ என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த மரம், பல ஆண்டுகளுக்குப் பிறகு, கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மலையாளத்தில் ‘நஞ்ஜு’ என்று அழைக்கப்படும் இந்த மரத்தின் தண்டு, இலை, பூக்கள் ஆகியவற்றில் நீரிழிவு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மரத்தில், செப்டம்பர் முதல் டிசம்பர் மாதம் வரை மஞ்சள் நிறப் பூக்கள் பூக்கும்.

ஆய்வாளர்கள் செய்த களப்பணியில், இந்த ரக மர இனத்தில் வெறும் மூன்றே மூன்று தாவரங்களையே கண்டறிய முடிந்தது. இதன்படி இந்த மர இனம் அழிந்துவரும் தாவர இனங்களில் சேர்க்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. இந்த கண்டுபிடிப்பு குறித்து, ‘Webbia Journal of Plant Taxonomy and Geography’ என்ற இதழில் வெளியாகியுள்ளது.

இந்த இரு கண்டுபிடிப்புகளும், மேற்கு தொடர்ச்சி மலையைப் பாதுகாக்கும் முயற்சிகளுக்கு ஒரு தூண்டுகோலாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தமிழில்: ஷோபனா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x