Last Updated : 15 Jun, 2018 05:00 PM

 

Published : 15 Jun 2018 05:00 PM
Last Updated : 15 Jun 2018 05:00 PM

‘‘அக்பர் அல்ல; ராணா பிரதாப் சிங்தான் சிறந்த அரசர்’’ - யோகி ஆதித்யநாத்

ரஜபுத் அரசர் மகாராணா பிரதாப் சிங் தானே தவிர அக்பர் இல்லை என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

மகாராணா பிரதாப் ஜெயந்தி நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசுகையில் ‘‘வீரத்திற்கு முன்னுதாரணம் என்று சொன்னால் முகலாய ராணுவத்தின் வலிமையை தீரத்தோடு எதிர்கொண்டவகையில் மகாராணா பிரதாப் சிங் தான். அவர் தான் சிறந்த அரசர்; முகலாய பேரரசர் அக்பர் இல்லை.

ஹால்டிகாட்டி போரில் வென்றது முக்கியம் அல்ல. அதில் முக்கியமானது அந்த நேரங்களில் மிகவும் சக்தி வாய்ந்த ராணுவத்தை போர்முனையில் நிறுத்தியதுதான். அப்போரில் மகாராணா பிரதாப் காட்டிய தைரியமும் வீரமும் வரலாற்றில் மிக அரிதானது.

ஆரவல்லி மலைத்தொடரில் இப்போர் ஐந்து ஆண்டுகள் தொடர்ச்சியாக நடைபெற்றது. கடைசியாக அனைத்து கோட்டைகளையும் வென்ற பிறகு சிறந்த அரசர் அக்பர் இல்லை மகாராணா பிரதாப் தான் என்று நிரூபித்தார்.

1576ல் ஹால்டிகாட்டி போரில் முகலாய பேரரசர் அக்பரின் படைகளை மகாராணா பிரதாப் தோற்கடித்தது பற்றி வரலாற்று ஆய்வாளர்களின் புகழ்பெற்ற கோணம் ஒன்று உண்டு. வரலாற்றின் அந்த கட்டத்தில் கூட மகாராணாவின் துணிவும் வீரமும் சுயமரியாதையையும் நாட்டின் கவுரவத்தையும் பாதுகாத்தன.'' எனவே ரஜபுத் மன்னர் இன்றும் நம்மோடு சம்பந்தப்பட்டிருக்கிறார்’’ என்று யோகி ஆதித்யநாத் பேசினார்.

ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் பத்திரிகையான அவாத் ப்ரஹரியின் சிறப்பிதழ் ஒன்றையும் இக்கூட்டத்தில் முதல்வர் வெளியிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x