அவசர காலங்களில் நீர்மூழ்கியில் இருந்து கடற்படை வீரர்கள் பாதுகாப்பாக தப்பிச் செல்வதற்கான பயிற்சி விசாகப்பட்டி னத்தில் தொடங்கப்பட்டு உள்ளது. படம்: பிடிஐ
அவசர காலங்களில் நீர்மூழ்கியில் இருந்து கடற்படை வீரர்கள் பாதுகாப்பாக தப்பிச் செல்வதற்கான பயிற்சி விசாகப்பட்டி னத்தில் தொடங்கப்பட்டு உள்ளது. படம்: பிடிஐ

நீர்மூழ்கியில் இருந்து தப்பிக்கும் பயிற்சி விசாகப்பட்டினத்தில் தொடக்கம்

Published on

விசாகப்பட்டினம்: பிரான்ஸின் டிசிஎன்எஸ் நிறுவனத்திடம் இருந்து தொழில்நுட்ப உரிமம் பெற்று 6 ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கி கப்பல்கள் மும்பை மட்கானில் உள்ள கப்பல் கட்டுமான தளத்தில் தயாரிக்கப்பட்டன. இதில் 5 நீர்மூழ்கிகள் கடற்படையில் சேர்க்கப்பட்டு உள்ளன.

இந்த சூழலில், அவசர காலங்களில் ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கிகளில் இருந்து கடற்படை வீரர்கள் பாதுகாப்பாக தப்பிச் செல்வதற்கான பயிற்சி விசாகப்பட்டினத்தில் நேற்று முன்தினம் தொடங்கப்பட்டது. இதற்காக விசாகப்பட்டினத்தின் ஐஎன்எஸ் கடற்படைத் தளத்தில் வினெட்ரா என்ற பெயரில் பயிற்சி மையம் அமைக்கப்பட்டு உள்ளது. ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கியில் பணியாற்றும் வீரர்கள், அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. இதுதொடர்பான புகைப்படங்கள், வீடியோவை கடற்படை வெளியிட்டிருக்கிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in