இந்தியா
ஆந்திர பிரிவினைக்கு எதிர்ப்பு: மத்திய அமைச்சர் கே.எஸ்.ராவ் ராஜினாமா
மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கே.சாம்பசிவ ராவ் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
ஆந்திரப் பிரிவினைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த முடிவை எடுத்த அவர், தனது ராஜினாமா கடிதத்தை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அளித்தார்.
63 வயதாகும் கே.எஸ்.ராவ், ஆந்திராவின் எலுரு தொகுதி காங் கிரஸ் எம்.பி.யாவார். 1984ம் ஆண்டு மக்களவைக்கு முதல்முறையாகத் தேர்வு செய்யப்பட்ட அவர், 5 முறை எம்.பி.யாக இருந்துள்ளார். ஆந்திர மாநில காங்கிரஸில் முக்கிய தலைவரான கே.எஸ்.ராவ், மத்திய கணக்குத் தணிக்கை குழு, மற்றும் பல்வேறு நாடாளுமன்ற நிலைக்குழுவில் உறுப்பினராக இருந்துள்ளார்.
ஆந்திர மாநிலத்துக்கு சேதத்தை ஏற்படுத்த காரணமாக இருந்த அரசில் அமைச்சர் பதவியில் தொடர எனது மனசாட்சி இடம் தரவில்லை என்று அவர் தனது ராஜினாமா கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
