Published : 23 Aug 2014 06:33 PM
Last Updated : 23 Aug 2014 06:33 PM

அயோத்தியில் ராமர் கோயில்: பிரதமர் மோடிக்கு சுப்பிரமணியன் சுவாமி கடிதம்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு சுப்பிரமணியன் சுவாமி கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து அவர் அந்தக் கடிததில் ஆலோசனைகளை வழங்கியுள்ளார். 2016ஆம் ஆண்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்டி முடிக்கப்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார் சுவாமி.

அதாவது, முன்னாள் தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா போன்ற ஒருவரை இதற்காக நியமிக்க வேண்டும் என்றும் இவருடன் மத்திய அமைச்சர் வி.கே.சிங் இணைந்து பணியாற்றுவதற்கான சூழ்நிலை உருவாக்க வேண்டும்

இந்தப் பொறுப்பு அளிக்கப்படும் மத்திய அமைச்சர் ராம ஜென்ம பூமிக்கு மரபுரிமை கோரும் பாபர் மசூதி மேற்பார்வையாளருக்கு நோட்டீஸ் அனுப்பி அவரது கோரலை வாபஸ் பெறச் செய்யவேண்டும்.

மசூதி கட்ட சரயு நதிப் பக்கத்தில் வேறு இடம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இதற்காக அயல்நாடுகளிலிருந்து இஸ்லாமிய மதக்குருமார்களை அழைத்து பாபர் மசூதிக்கு மாற்று இடம் வழங்குவதற்கான ஒப்புதலைப் பெற வேண்டும்.

இவற்றை செய்ய முடியாது போனால், இதற்கான மசோதாவை நிறைவேற்ற வேண்டும். ராமர் கோயில் மறுகட்டுமானக் குழு சோம்நாத் கோயில் மாதிரியில் அமைக்கப்பட வேண்டும் போன்ற பரிந்துரைகளை அவர் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x