Published : 19 Jun 2018 01:20 PM
Last Updated : 19 Jun 2018 01:20 PM

விருந்து நிகழ்ச்சியில் விஷமான உணவு: 3 குழந்தைகள் பலி; 80 பேர் மருத்துவமனையில் அனுமதி

மகாராஷ்டிர மாநிலத்தில் விருந்து நிகழ்ச்சியில் சாப்பிட்ட 3 குழந்தைகள் உடல்நலக் கோளாறு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர். 80 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு கிகிச்சை பெற்று வருகின்றனர்.

மகாராஷ்டிர மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் உள்ள கோபோலி என்ற கிராமத்தில் மானே என்பவர் புதிய வீடு கட்டியுள்ளார். வீட்டு கிரக பிரவேசம் முடிந்து நேற்று இரவு விருந்து நிகழ்ச்சி நடந்துள்ளது. அந்த கிராமத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் விருந்தில் கலந்து கொண்டனர். ஏராளமான உணவு வகைகள் விருந்தில் பரிமாறப்பட்டன.

முதல் வரிசை முடிந்து இரண்டாவது வரிசை தொடங்கியது. அப்போது முதல் வரிசையில் அமர்ந்து சாப்பிட்ட பலருக்கு தலைசுற்றல், வாந்தி, வயிற்று வலி ஏற்பட்டது. குறிப்பாக குழந்தைகளுக்கு அதிகஅளவு பாதிப்பு ஏற்பட்டது.

உடனடியாக அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பலருக்கு வயிற்று வலி அதிகமானது. சிகிச்சை 3 குழந்தைகள் உயிரிழந்தனர். மேலும் 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. மொத்தம் 80 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உணவு விஷயமானது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.  உணவு கெட்டுப்போனதால் இந்த சம்பவம் நடந்ததா அல்லது விஷப் பொருள் ஏதேனும் உணவில் கலந்ததா எனவும் உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x