மிஸ் இந்தியா பட்டம் வென்றார் சென்னை மாணவி

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் சென்னை மாணவி
Updated on
1 min read

மிஸ் இந்தியா அழகிப் போட்டியில்  பட்டம் வென்றிருக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த அனுகீர்த்தி வாஸ்.

சென்னை லயோலா கல்லூரி மாணவியான, 19 வயதான அனுகீர்த்தி வாஸ் மும்பையில் செவ்வாய்க்கிழமை நடந்த மிஸ் இந்தியா போட்டியில் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

அனுகீர்த்தி வாஸுக்கு முன்னால் மிஸ் இந்தியா அழகியும், உலக அழகி பட்டம் வென்ற மனுஷி ஜில்லார் அழகி பட்டத்தை சூட்டினார்.

 பட்டம் வென்ற அனுகீர்த்தி ”சிறந்த மாடலாக வேண்டும்”என்பதே தனது விருப்பம் என்று தெரிவித்தார்.

இந்தப் போட்டியில் இரண்டாவது இடம் ஹரியாணா  மா நிலத்தைச் சேர்ந்த மீனாக்‌ஷி சவுந்திரி பெற்றார்.

மிஸ் இந்தியா நிகழ்ச்சியை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் கரண் ஜோக்கர், நடிகருமான ஆயுஷ்மான் குரானா தொகுத்து வழங்கினார்கள்.

நடுவர்களாக கிரிக்கெட் வீர்ர்கள் குனால் கலூர், மலைகா அரோரா,  இர்பான் பதான், கே.எல். ராகுல் ஆகியோரும் கலந்துக் கொண்டனர்.

 மாதுரி திக்‌ஷித், ஜாக்குலின் பெர்னாட்டஷ் ஆகியோரின் நடன நிகழ்ச்சிகள் இடப்பெற்றன.

அனுகீர்த்தி வாஸின் புகைப்படங்கள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in