தொழில்நுட்ப பராமரிப்பு: 3 நாட்களுக்கு பாஸ்போர்ட் சேவா தளம் செயல்படாது

தொழில்நுட்ப பராமரிப்பு: 3 நாட்களுக்கு பாஸ்போர்ட் சேவா தளம் செயல்படாது
Updated on
1 min read

புதுடெல்லி: தொழில்நுட்ப பராமரிப்புப் பணிக்காக பாஸ்போர்ட் சேவா தளம், ஆகஸ்ட் 29-ம் தேதி இரவு 8 மணி முதல் செப்டம்பர் 2-ம் தேதி காலை 6 மணி வரை பயன்பாட்டில் இருக்காது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த 3 நாட்களில் விண்ணப்ப பரிசீலனை, அப்பாய்ன்மென்ட் உள்ளிட்ட சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்.

இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம், “தொழில்நுட்ப பராமரிப்பு காரணமாக பாஸ்போர்ட் சேவா தளம் ஆகஸ்ட் 29-ம் தேதி இரவு 8 மணி முதல் செப்டம்பர் 2-ம் தேதி காலை 6 மணி வரை செயல்பாட்டில் இருக்காது. ஆகஸ்ட் 30-ம் தேதிஅப்பாய்ன்மென்ட் பெற்றிருப்பவர்களுக்கு, வேறொரு தேதி வழங்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளது.

இந்தத் தேதிகளில் குடிமக்கள் மட்டுமல்லாது, வெளியுறவு விவகார அதிகாரிகள், குடிவரவு பணியக அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்டோரும் பாஸ்போர்ட் சேவா தளத்தை பயன்படுத்த முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in