ஜெகன் கட்சியைச் சேர்ந்த 2 மாநிலங்களவை உறுப்பினர்கள் ராஜினாமா

ஜெகன் கட்சியைச் சேர்ந்த 2 மாநிலங்களவை உறுப்பினர்கள் ராஜினாமா
Updated on
1 min read

அமராவதி: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின்மாநிலங்களவை உறுப்பினர்களான எம். வெங்கட ரமணா, பி. மஸ்தான் ராவ் ஆகிய இருவரும் நேற்று காலை டெல்லியில் துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கரிடம் தங்களது ராஜினாமா கடிதங்களை நேரில் வழங்கினர்.

இது உடனடியாக ஏற்கப்பட்டது. இவர்கள் இருவரின் ராஜினாமாவை தொடர்ந்து ஜெகன் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 9-ஆக குறைந்துள்ளது.

இதில் வெங்கட ரமணாவின் பதவிக்காலம் 2026 வரையிலும், மஸ்தான் ராவின் பதவிக்காலம் 2028 வரையிலும் உள்ளது. இந்நிலையில் இவர்கள் இருவரும் விரைவில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகிஉள்ளன. தெலுங்கு தேசம் கட்சியில் இவர்களுக்கு இதே பதவிவழங்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in