Published : 19 Aug 2014 08:27 AM
Last Updated : 19 Aug 2014 08:27 AM

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் மாய மான்

நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் பொருளாதாரச் சிந்தனை, தனியார் நலனையும் பன்னாட்டு நிறுவனங்களின் நலனையுமே சார்ந்தது என்ற உண்மையை அவர்களுடைய முதல் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) உணர்த்து கிறது.

நிதியமைச்சர் அருண் ஜேட்லி யின் முதல் நிதிநிலை அறிக்கை யானது பேரியல் பொருளாதாரத் தின் (Macro Economics) அனைத்து இலக்கணங்களுக்கும் பொருந்தி தயாரிக்கப்பட்டதைப் போலவே தோன்றும். இந்த மாயமான் தோற்ற மானது அவருக்கு முன்னால் இத்துறையை நிர்வகித்த ப.சிதம்பரத்தின் நிதிநிலை அறிக் கைகளைப் பார்க்கும்போதும் ஏற் படும். இதில் உள்ள அடிப்படை யான தவறுகளில் மூன்றைப் பார்ப்போம்.

'பேசல்-3' நியதிகள்

“வங்கிகளுக்கு `பேசல்-3' நியதி களை அமல்படுத்துவது என்ற சர்வதேச முடிவுக்கு இந்தியாவும் கட்டுப்பட்டிருப்பதால், அரசுத் துறை வங்கிகளின் மூலதன அடித் தளத்தை விரிவுபடுத்த வேண்டி யிருக்கிறது. இந்த வங்கிகள் தொடர்ந்து அரசுக்குச் சொந்த மானவையாகவே திகழ்வதால் கூடுதல் நிதியைத் திரட்டும் பொறுப்பு அரசையே சாருகிறது. அரசிடம் நிதியாதாரங்கள் குறைவாக இருப்பதால், கூடுதல் மூலதன நிதியை பட்ஜெட் ஒதுக்கீடு மூலம் அரசுத்துறை வங்கிகளுக்குத் தர முடியாது. அதற்கு தனியார் நிதியைத்தான் நாட வேண்டும். அப்படியானால் அரசுத்துறை நிறுவனங்களில் அரசின் பங்கு மூலதனப் பங்களிப்பை வெறும் 51%-க்குக் குறைத்துக்கொள்ள வேண்டும்” என்கிறார் ஜேட்லி.

`பேசல்-3' நியதியை ஏற்றுக் கொண்டதே வங்கிகளை தேசிய மயமாக்கிய உணர்வுக்கு விரோத மான செயலாகும். விவசாயி களுக்கும் சிறிய உற்பத்தியாளர் களுக்கும் தேவைப்படும் கடன் உதவியைத் தாராளமாக வழங்க வேண்டும் என்பதற்காகத்தான் வங்கிகள் அரசுடைமையாக்கப்பட் டன. ஆனால் 'பேசல்-3' நியதியோ, வங்கிகள் வாராக்கடன் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் - அசலும் வட்டியும் திரும்பவராது என்றால் முன்னுரிமைத் துறை யாக இருந்தாலும் கடன் கொடுக் கக்கூடாது என்கிறது.

மூலதன அடித்தளத்தை உயர்த்த பங்குகளை விற்பது, அரசுத்துறை வங்கிகள் இப்போது வழங்கிவரும் கடன் தொகையை யும் கடன் இனங்களையும் அதற்கேற்ப உயர்த்துவதற்காக அல்ல; வாராக் கடன் இனங்களைக் குறைக்கவும் அந்த இனத்துக்கு வழங்கும் கடன் தொகையளவைக் குறைப்பதற்காகவும்தான்.

வங்கியின் பங்குகளைத் தனி யாருக்கு விற்காமலே அதன் மூல தன அடித்தளத்தை அதிகப்படுத்த லாம். அரசாங்கமே ரிசர்வ் வங்கி யிடம் கடன் வாங்கி, அந்த நிதியை வங்கிகளுக்கு மூலதன நிதியாக அளிக்கலாம். நிஜப் பொரு ளாதாரத்தில் இந்தப் பரிமாற்றம் எந்த விளைவையும் ஏற்படுத்தாது. ஏனென்றால் இதிலே பணம் எங்கிருந்தும், எங்கும் உண்மை யாக இடம்மாறிவிடவில்லை.

அரசுத்துறை நிறுவனப் பங்குகள் விற்பனை

அடுத்தது அரசுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பது. பட்ஜெட் பற்றாக்குறை யைக் குறைக்க, வருவாயைப் பெருக்க இந்த நடவடிக்கை எடுக் கப்படுகிறது. பட்ஜெட் பற்றாக் குறையால் பொருளாதாரத் துக்கு என்ன தீமைகள் ஏற்படுமோ அதே தீமைகள் அரசுத்துறை நிறுவனங்களின் பங்குகளைத் தனி யாருக்கு விற்பதாலும் ஏற்படும்.

பற்றாக்குறையை அரசு இரு விதங்களில் குறைக்கலாம். கடன் பத்திரங்களை வெளியிட்டு கடன் திரட்டி பற்றாக்குறையைக் குறைக் கலாம்; அல்லது பங்குகளை விற்று பணம் திரட்டி குறைக்கலாம். முன்னதில் கடன் பத்திரங்களைப் பொதுமக்கள் கையில் வைத்திருக் கப் போகிறார்கள். பின்னதில் அரசு நிறுவனப் பங்குகளை வைத் திருக்கப் போகிறார்கள். அரசு தன்னுடைய வருவாய்க்கு ஏற்ற அளவில் மட்டும் செலவிட்டால், பொருளாதாரத்தில் முதலீடே இருக் காது, மக்களுக்கு வருவாய் கிடைக் காது, அவர்களிடத்தில் சேமிப்பும் பெருகாது. அரசு அதிகம் செலவிட செலவிடத்தான் மக்களிடத்தில் பணஓட்டம் அதிகமாகும்.

ராணுவ உற்பத்தியில் அந்நிய நேரடி முதலீடு

நம் நாட்டின் ராணுவத் தேவை பெரும்பாலும் இறக்குமதிகள் மூலம்தான் பூர்த்தியாகிறது என்ப தால் ராணுவத்துக்கான அரசுத் துறை நிறுவனங்களில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை 49% அளவுக்கு உயர்த்தியிருக்கிறார் ஜேட்லி. இறக்குமதி செய்வதற்குப் பதில் இவற்றை இந்தியாவிலேயே தயாரித்தால் அரிய அந்நியச் செலாவணி சேமிக்கப்படும், பாது காப்புத்துறைக்கான தயாரிப்பு களில் தற்சார்பை எட்ட முடியும், உள்நாட்டில் வேலைவாய்ப்பும் அதிகரிக்கும் என்கிறார். இதற்காக அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை 26% முதல் 49% ஆக உயர்த்தியிருப்பதாகக் கூறுகிறார். 49%-க்கு அவர் கூறும் வாதங்கள் 100% உற்பத்திக்கே பொருந்துமே? நம் நாட்டிலேயே முழுக்க முழுக்க தயாரிக்கும் அளவுக்கு ஆராய்ச்சி, வளர்ச்சிப் பணிகளை ஊக்குவித் தால் என்ன தவறு?

பன்னாட்டு நிறுவனங் களிடம் நவீன தொழில் நுட்பங்கள் இருப்பதால், 49% அளவுக்கு நேரடி அந்நிய முதலீட்டுக்கு அனுமதி தந்தால்தான் அவர்கள் இந்தியா வில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவார் கள் என்று கூறியிருக் கிறார். நாம் தன்னிறைவு அடைய வேண்டுமென்றால் இந்தத் தொழில்நுட்பங்கள் நமக்குக் கிடைக்க வேண்டும், நம்மிடமே நிரந்தரமாகத் தங்கி யிருக்க வேண்டும். பன்னாட்டுத் தொழில்நிறுவனங்கள் தங்களு டைய வியாபார ரகசியத்தையும் தொழில்நுட்ப ரகசியத்தையும் பாதுகாக்கவே முன்னுரிமை தரும். 49% பங்குகளை அவர்கள் கேட் பதே, இந்தத் தொழில்நுட்பங்கள் நம் கைக்கு வந்துவிடாமல் பார்த்துக்கொள்வதற்குத்தான். எனவே ஜேட்லியின் வாதம் அடிபட்டுப்போகிறது.

வெளிநாடுகளிலிருந்து ராணு வத்துக்கு வேண்டிய ஆயுதங் களையும் கருவிகளையும் தள வாடங்களையும் நேரடியாக இறக்குமதி செய்தாலும், 49% நேரடி முதலீட்டுடன் இங்கேயே தயாரிக்க ஒப்புக்கொண்டாலும் சுயச்சார்பு என்ற கொள்கை நிறைவேறாது. தன்னிறைவு அடைவதற்குப் பதிலாக நாம் பல பன்னாட்டு நிறுவனங்களைச் சார்ந்திருக்கவே நேரும்.

அறிவுசார் சொத்துரிமை

இப்போது நாம் அறிவுசார் சொத்துரிமை யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தொழில்நுட் பங்களைப் பொருத்தவரை பன் னாட்டு நிறுவனங்கள் முன்பை விட இப்போது மிகவும் எச்சரிக் கையாக அவற்றைக் கட்டிக்காக் கின்றன. எந்தக் காரணத்துக்காக வும் அவற்றைப் பிற நாடுகளுடன் பகிர்ந்துகொள்ள அவை தயா ரில்லை. இந்த நிலையில் இந்தியா வில் உற்பத்தியைத் தொடங்கவும் கருவிகளை விற்கவும் இரு பன்னாட்டு நிறுவனங்களுக்கு இடையே போட்டி ஏற்பட்டால் அதை நாம் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ராணுவத்துக் குத் தேவையானவற்றைத் தயாரிப் பதில் தன்னிறைவு காண வேண்டும் என்ற அக்கறை ஜேட்லிக்கு உண் மையிலேயே இருந்தால், வர்த்தகம் தொடர்பான அறிவுசார் சொத்துரி மைகள் தொடர்பாக அவர் மீண்டும் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கத் தயாராக இருக்க வேண்டும்.

காப்பீட்டுத்துறை

காப்பீட்டுத்துறையை எடுத்துக் கொண்டால், பாலிசிதாரருக்குச் சேர வேண்டிய பணத்தை உரிய காலத்தில் கொடுப்பதில்தான் அந்த நிறுவனத்தின் வெற்றியே இருக் கிறது. இந்த விஷயத்தில் பல பன் னாட்டு நிறுவனங்களைவிட இந்திய நிறுவனங்கள் முன்னணி யில் இருக்கின்றன. எனவே காப் பீட்டுத்துறையில் 49% அந்நிய முதலீட்டை வரவேற்பது சர்வதேச நிதி நிறுவனங்களைத் திருப்திப் படுத்துவதற்குத்தான்.

© ஃபிரன்ட்லைன் தமிழில் சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x