Published : 29 Aug 2024 05:21 AM
Last Updated : 29 Aug 2024 05:21 AM
லக்னோ: உத்தர பிரதேசத்தில் கொண்டுவரப்பட்ட புதிய சமூக ஊடக கொள்கைக்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் போன்ற சமூக ஊடகங்களில் வெளியாகும் தகவல்களை ஒழுங்குப்படுத்தும் நோக்கத்தில் இந்த புதிய கொள்கை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் கண்டனத்துக்குரிய தகவல்களை பதிவிட்டால் நடவடிக்கை பாயும்.
தேசத் விரோத தகவல்களை பதிவிட்டால் 3 ஆண்டுகள் முதல் ஆயுள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். ஆபாசம் மற்றும் அவதூறு தகவல்களை பதிவிட்டால், குற்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும். முன்பு இதுபோன்ற நடவடிக்கைகள் தகவல் தொழில் நுட்ப சட்டப்பிரிவுகளின் கீழ் எடுக்கப்பட்டு வந்தன.
அதே நேரத்தில் சமூக ஊடகத்தில் அரசின் திட்டங்களை, சாதனைகளை பகிர்ந்தால், அவர்களது தளத்துக்கு விளம்பரம் அளித்து ஊக்குவிக்கப்படும். தனிப்பட்ட நபர்களுக்கு ஊக்கத் தொகை அளிக்கப்படும். இதன் மூலம் சமூகஊடகத்தில் உ.பி அரசு திட்டங்களை பகிர்ந்து மாதம் ரூ.8 லட்சம்வரை சம்பாதிக்க முடியும். சமூகஊடக பிரபலங்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT