

ஆந்திர மாநிலம் காணிப்பாக்கம் விநாயகர் கோயிலுக்கு துப்பாக்கி யுடன் வந்த நடிகர் சரண்ராஜ், தேவஸ்தான அதிகாரிகளிடம் மன்னிப்பு கேட்டதால் வழக்கு பதிவு செய்யாமல் அனுப்பி வைத்தனர்.
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற காணிப்பாக்கம் சுயம்பு வரசித்தி விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயிலில் 21 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. விநாயகர் சதுர்த்தி என்பதால் வழக்கத்தைவிட ஏராளமான பக்தர்கள் வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனர்.
காலையில் சுவாமி தரிசனத்துக்கு வந்த நடிகர் சரண்ராஜ், மெட்டல் டிடெக்டர் வாசல் வழியாக கோயிலுக்குள் சென்றார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார், சரண்ராஜிடம் கைத்துப்பாக்கி இருப்பதைக் கவனித்தனர். உடனடியாக அவர்கள் மேலதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
பின்னர் தேவஸ்தான அதிகாரிகளும் போலீஸாரும் வந்து சரண்ராஜை சோதனையிட்டனர். அப்போது அவரிடம் கைத்துப் பாக்கி இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. அதை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
கோயிலுக்குள் கைத்துப்பாக்கி, கத்தி போன்ற ஆயுதங்களை கொண்டுசெல்லக்கூடாது என சட்டம் இருந்தும் எப்படி துப்பாக்கியுடன் கோயிலுக்குள் வரலாம் என சரண்ராஜிடம் அதிகாரிகள் கேட்டனர்.
அதற்கு சரண் ராஜ், இந்த துப்பாக்கி வைத்திருக்க என்னிடம் லைசென்ஸ் உள்ளது என தெரிவித்து அதற்கான ஆதாரங்களைக் காண்பித்தார். பின்னர் கோயிலுக்குள் தெரி யாமல் துப்பாக்கியை கொண்டு வந்து விட்டேன், மன்னித்து விடுங்கள் என கோயில் அதிகாரிகளிடமும் போலீஸாரிட மும் கேட்டுக்கொண்டார்.
இதனை தொடர்ந்து, சரண் ராஜ் சுவாமி தரிசனம் செய்த பின்னர் அவரிடம் துப்பாக் கியை போலீஸார் கொடுத்து அனுப்பினர்.