

ஹைதராபாத்: வீட்டில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த காவல் துணை உதவி ஆய்வாளர் பரிதாபமாக உயிரிழந்தார். தெலங்கானா மாநிலம், நிஜாமாபாத் காவல் நிலையத்தில் துணை உதவி ஆய்வாளராக (ஏஎஸ்ஐ) பணியாற்றியவர் தத்ராத்ரி (56). இவர் இந்த காவல் நிலையத்தில் கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.
தெலங்கானா மாநிலம், ஆர்மர் நகரை சேர்ந்த இவர், பல ஆண்டுகளாக நிஜாமாபாத்தின் காயத்ரி நகரில் வசித்து வந்தார். இவர் தினமும் வீட்டில் உடற்பயிற்சி செய்வது வழக்கம்.
அதன்படி, நேற்று காலையில் வீட்டிலேயே உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த அவர் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனை கண்ட குடும்பத்தினர், உடனடியாக அருகில் இருந்த ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர் கள், ஏற்கெனவே மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இவரது திடீர் மறைவு, அவரது குடும்பத்தாருக்கும் காவல் துறைக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.