

டெல்லி மெட்ரோ ரயில் கழகத்தில் 500 மெகாவாட் அளவிலான சூரிய மின் ஆற்றல் நிலையத்தைத் தொடங்கி வைத்த மத்திய நகர மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறியதாவது:
தற்போது 20 லட்சத்துக்கும் அதிகமாக மக்கள்தொகை உள்ள நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை அளிப்பதற்கு மட்டுமே மத்திய அரசு நிதியுதவி செய்து வருகிறது. மெட்ரோ ரயில் சேவைக்கு மக்களிடையே அதிக வரவேற்பு கிடைத்துள்ளதால், மேற்கண்ட மக்கள்தொகை விதியைத் தளர்த்த மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
இதனால் இனி 10 லட்சம் மக்கள்தொகை கொண்ட நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை அளிக்க வாய்ப்பு ஏற்படும்.இவ்வாறு அவர் கூறினார்.