வன்கொடுமை செய்து செவிலியர் கொலை: உ.பி.யில் ஒருவர் கைது

வன்கொடுமை செய்து செவிலியர் கொலை: உ.பி.யில் ஒருவர் கைது

Published on

உத்தம்சிங் நகர்: உத்தரபிரதேசத்தின் ராம்பூர் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர், உத்தராகண்ட் மாநிலத்தின் உத்தம்சிங் நகரில் ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். இப்பெண் கடந்த ஜூலை 30-ம் தேதி காணாமல் போனார். ஒரு வாரம் கழித்து அப்பெண் அவரது கிராமத்தில் ஒரு புதரில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பிரேதப் பரிசோதனையில் அப்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக உ.பி.யின் பரேலி மாவட்டத்தை சேர்ந்த தர்மேந்திர குமார் என்றகூலித் தொழிலாளியை போலீஸார் கடந்த புதன்கிழமை கைது செய்துள்ளனர். அப்பெண்ணின் செல்போன் ராஜஸ்தானில் பயன்பாட்டில் இருப்பது தெரியவந்தது.இதன் அடிப்படையில் தர்மேந்திர குமார் கைது செய்யப்பட்டார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in