அரசு, தனியார் பெண் ஊழியர்களுக்கு ஒரு நாள் மாதவிடாய் விடுமுறை: ஒடிசா துணை முதல்வர் அறிவிப்பு

அரசு, தனியார் பெண் ஊழியர்களுக்கு ஒரு நாள் மாதவிடாய் விடுமுறை: ஒடிசா துணை முதல்வர் அறிவிப்பு
Updated on
1 min read

புவனேஸ்வர்: ஒடிசாவில் அரசு மற்றும் தனியார் பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய ஒரு நாள் மாதவிடாய் விடுமுறையை அம்மாநில துணை முதல்வர் பிரவதி பரிதா நேற்று அறிவித்தார்.

ஒடிசா மாநில துணை முதல்வரும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சருமான பிரவதி பரிதா நேற்று கட்டாக் நகரில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பங்கேற்றார்.

பின்னர் அவர் கூறுகையில், “ஒடிசாவில் அரசு மற்றும் தனியார் நிறுவன பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய ஒரு நாள் மாதவிடாய் விடுமுறை வழங்கப்படும். மாதவிடாய் சுற்றின் முதல் அல்லது இரண்டாவது நாளில் இந்த விடுமுறையை எடுத்துக் கொள்ளலாம். என்றாலும் இந்த விடுமுறையை எடுத்துக்கொள்வது பெண்களின் விருப்பத்தை பொறுத்தது” என்றார்.

கென்யாவில் விடுமுறை: கென்யாவின் நைரோபி நகரில் ஐக்கிய நாடுகளின் சிவில் சொசைட்டி மாநாடு இந்த ஆண்டு நடைபெற்றது. இதில் ஒடிசா சிறுமி ஒருவர் மாதவிடாய் காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை கோரி குரல் எழுப்பினார்.

ஒடிசாவை சேர்ந்த பெண்ணியவாதி ரஞ்சிதா பிரியதர்ஷினியும் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடியவிடுமுறை குறித்து பேசி சர்வதேசமாநாட்டில் அனைத்து பிரதிநிதிகளின் கவனத்தை ஈர்த்திருந்தார். உலகெங்கிலும் உள்ள பெண்கள் மாதவிடாயின்போது ஏற்படும்உடல் வலியால் பாதிக்கப்படுவதாக அவர் வாதிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in