Published : 15 Aug 2024 05:06 AM
Last Updated : 15 Aug 2024 05:06 AM
திருவனந்தபுரம்: வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் கடந்த மாதம் 30-ம் தேதி கனமழை பெய்தது. இதனால் முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை, மேப்பாடி ஆகிய பகுதிகளில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 420 பேர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் காணாமல் போய் உள்ளனர். நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுசீரமைப்பு பணிகள் செய்ய ரூ. 2,000 கோடி நிதியுதவி அளிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில் கேரள முதல்வர்பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாநில பேரிடர் நிவாரணநிதியிலிருந்து ரூ.4 லட்சம், முதல்வரின் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் என மொத்தம்ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.
மேலும் நிலச்சரிவால் காய மடைந்து 60 சதவீதத்துக்கு மேல் இயலாமை ஏற்பட்டவர்களுக்கு ரூ.75 ஆயிரமும், 40 முதல் 60% வரையிலான இயலாமை ஏற்பட்டவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும். வீடுகளை இழந்து வாடகை வீட்டிலோ உறவினர் வீட்டிலோ குடியிருப்போருக்கு மாதம் ரூ.6 ஆயிரம் வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT