வக்பு சட்ட திருத்த மசோதாவை ஆராயும் ஜேபிசி தலைவராக ஜெகதாம்பிகா பால் நியமனம்

வக்பு சட்ட திருத்த மசோதாவை ஆராயும் ஜேபிசி தலைவராக ஜெகதாம்பிகா பால் நியமனம்
Updated on
1 min read

புதுடெல்லி: சர்ச்சைக்குரிய வக்பு சட்டத் திருத்த மசோதாவை ஆராயும் நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் தலைவராக பாஜக மூத்த உறுப்பினர் ஜெகதாம்பிகா பால் நியமிக்கப்பட்டுள்ளார்.

வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா மக்களவையில் கடந்தவியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. வக்பு வாரியங்களில் முஸ்லிம் பெண்களும், முஸ்லிம் அல்லாதோரும் இடம்பெறுவதை உறுதிசெய்வது உள்ளிட்ட 40 திருத்தங்களுடன் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்குகாங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் ஆய்வுக்கு அனுப்ப மத்திய அரசு முடிவு செய்தது.

இந்நிலையில் மசோதாவை ஆராய மக்களவையில் இருந்து 21 பேர், மாநிலங்களவையில் இருந்து 10 பேர் என மொத்தம் 31 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜேபிசி) அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டுக் குழுவின் தலைவராக பாஜகவின் மூத்த மக்களவை உறுப்பினர் ஜெகதாம்பிகா பால்நியமிக்கப்படுவதாக மக்களவை சபாநாயர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார். குழுவில் இடம்பெற்றுள்ள மக்களவை உறுப்பினர்கள் 21 பேரில் 8 பேர் பாஜகவையும் 4 பேர் அதன் கூட்டணிக் கட்சிகளையும் சேர்ந்தவர்கள் எஞ்சிய 9 பேர் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள்.

குழுவில் இடம்பெற்றுள்ள மாநிலங்களவை உறுப்பினர்கள் 10 பேரில் 4 பேர் பாஜகவையும் 4 பேர் எதிர்க்கட்சிகளையும் சேர்ந்தவர்கள். ஒய்எஸ்ஆர் காங்கிரஸைசேர்ந்த ஒருவரும் நியமன உறுப்பினர் ஒருவரும் இடம்பெற்றுள்ள னர். நாடாளுமன்ற கூட்டுக் குழு தனது அறிக்கையை அடுத்த கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in