திருப்பதி மலைக்கு பைக்கில் செல்ல காலை 6 முதல் இரவு 9 வரை அனுமதி

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

திருமலை: திருப்பதியில் இருந்து திருமலைக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள், வியாபாரிகள், தேவஸ்தான ஊழியர்கள், போலீஸார், செய்தியாளர்கள் என பல்வேறு தரப்பினர் மோட்டார் சைக்கிள்களில் சென்று வருவது வழக்கம். தற்போது விலங்குகள் இனப்பெருக்கத்தில் ஈடுபடும் காலம் என்பதால், இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிள்களில் செல்வது ஆபத்தானது என்று வனத்துறையினர் எச்சரித்து உள்ளனர்.

இதன் காரணமாக வரும் செப்டம்பர்30-ம் தேதி வரை திருமலை மலைப்பாதையில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே மோட்டார் சைக்கிள்கள் செல்ல அனுமதி வழங்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. புதிய நடைமுறை நேற்று முதல் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. மோட்டார் சைக்கிள்களில் திருமலைக்கு வருவோர் கட்டாயம் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும் என்றும் தேவஸ்தானம் அறிவுறுத்தி உள்ளது.

திருக்கல்யாண உற்சவம் ரத்து: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 15-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை சம்பங்கி மண்டபத்தில் வருடாந்திர பவித்ரோற்சவ விழா நடைபெற உள்ளது. இதன்காரணமாக வரும் 18-ம் தேதி காலை நடைபெற உள்ள திருக்கல்யாண உற்சவத்தை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in