

இந்தியாவிற்குள் எபோலா வைரஸ் பரவாமல் இருப்பதற்காக அணைத்து சர்வதேச நாடுகளுக்கிடையே விமான போக்குவரத்தை கொண்டுள்ள விமான நிறுவனங்களுக்கும் விமான துறை இயக்குனரகம் விதிமுறைகள் அமைத்துள்ளது. இந்த விமான நிறுவனங்கள் உடனடியாக தேவையான தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
விமான அறிவிப்பின் போது பயணிகளுக்கு எபோலா வைரஸ் தாக்குதலின் அறிகுறிகள் தென்பட்டால் தானாக முன் வந்து தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ள வேண்டும். இந்த அறிவிப்பின் நகலை பயணிகளிடம் அளிக்க வேண்டும்.
பயணிகள் தானாக வந்து எபோலா வைரஸின் அறிகுறிகள் இருப்பதாக தெரிவித்தால் பயணிகளுக்கான மருத்துவ பிரிவுக்கு தெரிவிக்க வேண்டும்.
கடந்த 21 நாட்களில் எபோலாவால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு பயணம் செய்துள்ளனரா அல்லது பயணத்தின் பொழுது / பயணத்திற்கு பிறகு எபோலாவின் அறிகுறிகள் இருக்கிறதா போன்ற விவரங்களை சமர்பிக்கும் சுகாதார அட்டவணையை அணைத்து பயணிகளுக்கும் அளிக்க வேண்டும்.
விமான துறை இயக்குனரகம் அமைத்துள்ள விதிமுறைகள் மற்றும் எபோலா வைரஸால் தாக்குதலின் சந்தேகம் இருந்தால் எடுக்க வேண்டிய சுகாதார நடவடிக்கைகள் கொண்ட நகலை அனைத்து விமான நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து பயணிகளுக்கும் விமான பணி உறுப்பினர்களுக்கும் இந்தியாவிற்கு வந்து சேர்வதற்கு முன் இந்த விதிமுறைகளின் நகலை அளிக்க வேண்டும்.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து குறிப்பாக பாதிக்கப்பட்ட நான்கு நாடுகளில் இருந்து திரும்பும் அனைத்து பயணிகளின் விவரங்களை பதிவு செய்து, விமான சுகாதார அதிகாரிகளுக்கு விமான நிறுவனங்கள் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகளின்படி இந்தியாவிற்கு வர உள்ள பயணிகளின் விவரங்களை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்று இந்திய மற்றும் வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.