அதிக விளைச்சல் தரும் 109 பயிர் வகைகளை அறிமுகம் செய்கிறார் பிரதமர்

அதிக விளைச்சல் தரும் 109 பயிர் வகைகளை அறிமுகம் செய்கிறார் பிரதமர்
Updated on
1 min read

புதுடெல்லி: அதிக விளைச்சல் தரும் 109 பயிர் வகைகளை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இன்று அறிமுகம் செய்கிறார். கடந்த ஜூலை 23-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் அதிக விளைச்சல் தரும் 109 பயிர் வகைகள் அறிமுகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி, பருவநிலையைத் தாங்கி, அதிக விளைச்சல் தரக்கூடிய 109 பயிர் வகைகளை பிரதமர் மோடி டெல்லியில் இன்று அறிமுகம் செய்கிறார்.

சிறுதானியங்கள், தீவன பயிர்கள், எண்ணெய் வித்துக்கள்,பருப்பு வகைகள், கரும்பு, பருத்தி, நார்ச்சத்து உள்ளிட்ட தானியங்களின் விதைகள் வெளியிடப்படும். பல்வேறு வகையான பழங்கள், காய்கறி பயிர்கள், கிழங்கு பயிர்கள், பூக்கள், மூலிகைப் பயிர்களுக்கான விதைகள் வெளியிடப்படும். இந்த புதிய பயிர்கள் வறட்சியை தாங்கி வளரும்.

புதிய பயிர் அறிமுக விழாவில் கல்ப சுவர்ணா, கல்ப சதாப்தி ஆகிய 2 புதிய தென்னை மரங்களும் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இதில் கல்ப சுவர்ணா உயரம் குறைந்த தென்னை மரம் ஆகும். இது இளநீர், கொப்பரை தேங்காய் உற்பத்திக்கு ஏற்றதாகும். ஆண்டுக்கு 130 இளநீர் தேங்காய்கள் கிடைக்கும்.

கல்ப சதாப்தி என்ற உயரமான தென்னை மரம், பெரிய தேங்காய்வகையை சேர்ந்தது. இந்த மரத்தில் ஓராண்டில் 148 தேங்காய்கள் கிடைக்கும். இரு தென்னை மரங்களையும் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவில் பயிரிட அறிவுறுத் தப்பட்டு உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in