முஸ்லிம்களுக்கு எதிரானதல்ல வக்பு சட்ட திருத்த மசோதா: மத்திய அமைச்சர் தகவல்

முஸ்லிம்களுக்கு எதிரானதல்ல வக்பு சட்ட திருத்த மசோதா: மத்திய அமைச்சர் தகவல்
Updated on
1 min read

புதுடெல்லி: வக்புவாரியங்களை நிர்வகிக்கும் வக்பு சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பான மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஐக்கிய ஜனதா தள தலைவரும் மத்திய அமைச்சருமான ராஜீவ் ரஞ்சன் சிங் நேற்று டெல்லியில் கூறியதாவது: வக்பு வாரிய சட்டத் திருத்தம் முஸ்லிம்களுக்கு எதிரானது என்று பல உறுப்பினர்கள் குரல் எழுப்பி வருகின்றனர். இது எப்படி முஸ்லிம் விரோதமாகும்? வழிபாட்டு தலத்தையும் அமைப்பையும் வேறுபடுத்தி பார்க்க வேண்டும். இது மசூதி நிர்வாகத்தில் தலையிடும் முயற்சி அல்ல. ஒரு அமைப்பின் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை கொண்டு வரும் முயற்சி.

சட்டத்தின் மூலம் நிறுவப்படும் எந்தவொரு அமைப்பும் எதேச்சதிகாரம் கொண்டதாக மாறுகிறது. அதில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் சட்டம் கொண்டு வர அரசுக்கு உரிமை உள்ளது. இதில் வகுப்புவாத முயற்சி எதுவும் இல்லை, எதிர்க்கட்சியினர் வதந்திகளை பரப்புகின்றனர். 1984-ல் சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் வெடித்தது. அப்போது சீக்கியர்களை கொன்றது யார்?

இந்த மசோதா கொண்டுவரப்பட வேண்டும். வக்பு வாரிய நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்பட வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in