

புதுடெல்லி: சத்குரு ஜக்கி வாசுதேவ் நேற்றுதனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நடத்தப்படும் கொடுமைகள் வங்கதேசத்தின் உள்விவகாரம் மட்டுமல்ல. இந்த விஷயத்தில் இந்தியா தலையிட வேண்டும். வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள் மீதும், கோயில்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். வங்கதேசத்தின் சிறுபான்மை இந்துக்களுடன் இந்தியா துணை நிற்க வேண்டும்.
அண்டை நாடாக இருக்கும் வங்கதேசத்துக்கு நாம் துணை நிற்க வேண்டும். அங்குள்ள இந்து சிறுபான்மையினருக்கு ஆதரவாக நாம் செயல்படவேண்டும். இந்தவிஷயத்தில் இந்தியா அரசு உடனடியாகத் தலையிட்டுள்ள அங்குள்ள இந்து சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும்.
நமது அண்டை நாட்டில்வசிக்கும் இந்து சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்யநாம் எழுந்து நின்று செயல்படா விட்டால் பாரதம், மகாபாரத நாடாகமுடியாது. இந்த அதிர்ச்சியூட்டும் அட்டூழியங்களில் இருந்து, மக்களைப் பாதுகாப்பது நமது பொறுப்பு. இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக யோகா குரு பாபா ராம்தேவ் கூறியுள்ளதாவது:
வங்கதேசத்தில் இந்துக்களின் வீடுகள், கோயில்கள் மற்றும்நிறுவனங்கள் மீது அடிப்படை வாதிகள் தாக்குதல் நடத்துவது மிகவும் வெட்கக்கேடானது.
வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மை இந்து சகோதரர்களுடன் இந்தியா துணை நிற்க வேண்டும். அங்குள்ள இந்து சகோதரிகள் மற்றும் மகள்களுக்கு ஆபத்து ஏற்படாத வகையில் இந்தியா விழிப்புடன் செயல்பட வேண்டும். வங்கதேசத்தை உருவாக்குவதற்கு நாம் உதவிசெய்தோம். அங்குள்ள இந்துக்களை பாதுகாப்பதிலும் நமது வலிமையை நாம் காட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.