புனேவில் 66 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு

புனேவில் 66 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு
Updated on
1 min read

புனே: மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களில் காய்ச்சலால் ஏராளமான பொதுமக்கள் அவதிப்பட்டனர். அவர்களுடைய ரத்த மாதிரிகளை சோதனை செய்தபோது அவர்களில் 66 பேருக்கு ஜிகா வைரஸ்பாதிப்பு ஏற்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.

இதில் 26 பேர் கர்ப்பிணிப் பெண்கள் ஆவர். புனேவில் பாதிக்கப்பட்ட இந்த 66 பேரில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் அவர்கள் ஜிகா வைரஸ் பாதிப்பால் உயிரிழக்கவில்லை. புனேவில் கடந்த ஜூன் மாதம் 20-ம் தேதி எரண்ட்வானே பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவரது வீட்டில் உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்து பார்த்தபோது அவருடைய 15 வயது மகளுக்கும் ஜிகா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in