மகாராஷ்டிர தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டி

மகாராஷ்டிர தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டி
Updated on
1 min read

மும்பை: மகாராஷ்டிராவில் சமீபத்திய மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் அணி), தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) ஆகிய கட்சிகளை கொண்ட இண்டியா கூட்டணியில் ஆம் ஆத்மி கட்சி இடம்பெற்றிருந்தது. தோழமை கட்சிகளுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தது. என்றாலும் மகாராஷ்டிராவில் எந்தவொரு தொகுதியிலும் போட்டியிடவில்லை.

மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்பு அடுத்த மாதம்வெளியாகலாம் என எதிர்பார்க் கப்படுகிறது.

இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் மும்பை தலைவர் ப்ரீத்தி சர்மா மேனன் நேற்று மும்பையில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘ நாட்டின் 3-வது பெரிய கட்சியாக ஆம் ஆத்மி உள்ளது. மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிடும்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in