

தன்னிடம் பணியாற்றும் ஊழியர்களிடத்தில் இருந்து அரசு தொடர்பான விஷயங்கள் மீது மாற்றுச் சிந்தனைகளை வரவேற்பதற்காக, நாடாளுமன்ற வளாகத்தில் வடக்குப் பகுதியில் ‘ஐடியா பெட்டி'களை வைத் துள்ளது மத்திய அரசு.
‘ஐடியா பாக்ஸ்' என்று ஆங்கிலத்திலும் மற்றும் ‘விசார் பெட்டிகா' என்று இந்தியிலும் எழுதப்பட்ட அந்தப் பெட்டிகள் வடக்குப் பகுதியின் முக்கியமான இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் இங்கிருக்கும் அலுவலகங்களுக்கு வருகை தரும் அரசு ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் யோசனைகளை இந்தப் பெட்டியில் எழுதிப் போட்டுவிடுவார்கள். அவை அவ்வப் போது படிக்கப்பட்டு சிறந்த யோசனைகள் நடைமுறைப்படுத்தப்படும்.
இந்த யோசனையை மத்திய அமைச் சகத்தின் பணியாளர் மற்றும் பயிற்சித்துறை முன்னெடுத்துள்ளது. இதுகுறித்து அத் துறையின் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘பல அரசு அலுவலகங்களில் கருத்துப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு மக்களிடம் இருந்து கருத்துகளைப் பெற முடியவில்லை. எனவே, ‘ஐடியா பாக்ஸ்' எனும் முயற்சியை மேற்கொண்டுள்ளோம். இதன் மூலம், குறிப்பாக பணியாளர்களிடமிருந்து நிறைய மாற்றுச் சிந்தனைகளை எதிர்பார்க்கிறோம்'' என்றார்.
மேலும் பணியாளர்களின் பணியார் வத்தைத் தூண்டுவதற்கு மாதாமாதம் சிறந்த பணியாளர்களைத் தேர்வு செய்வது, அவர்களுக்குத் துறைசார் பயிற்சிகள் வழங்குவது, அவர்களின் குறைகளைக் கேட்பது, அமைச்சர்களுடனான உரையாடல் நிகழ்ச்சிகளை நடத்துவது உள்ளிட்ட பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
ஏற்கெனவே மக்களிடமிருந்து மாற்றுச் சிந்தனைகளைப் பெறுவதற்குத் தனியாக ஒரு வலைதளம் தொடங்கப்பட்டது குறிப் பிடத்தக்கது.