Last Updated : 11 May, 2018 08:44 PM

 

Published : 11 May 2018 08:44 PM
Last Updated : 11 May 2018 08:44 PM

‘சமஸ்கிருதத்தை பள்ளிகளில் கட்டாயப் பாடமாக்க வேண்டும்’: சுப்ரமணியன் சுவாமி வலியுறுத்தல்

பள்ளிக்கூடங்களில் சமஸ்கிருதத்தை, தாய்மொழியோடு சேர்த்து கட்டாயப் பாடமாக நடத்த வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.

தெலங்கானா மாநிலம், ஐதராபாத் நகரில் இந்திய தொழில்துறை அமைப்பின் 8-வது மாநாடு இன்று நடந்தது. இதில் வளர்ந்து வரும் உலகில் இந்தியாவின் எதிர்காலம் என்ற தலைப்பில் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி பேசியதாவது:

என்னைப் பொறுத்தவரை அனைத்துப் பள்ளிக்கூடங்களிலும் தாய்மொழியோடு சேர்த்து, சமஸ்கிருதபாடத்தையும் கட்டாயமாக்க வேண்டும். 3-வது பாடமாக மாணவர்கள் எதை வேண்டுமானாலும் எடுத்துப் படித்துக்கொள்ளலாம். கணினியில் ஆர்ட்டிபிசியல் இன்டலிஜன்ஸ்காக அறிவுத்திறனைச் சேமித்து வைக்க ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரே மொழி சமஸ்கிருதமாகும்.

சிலருக்கு பல்வேறு பிரிவுகளில் திறன்பெற்ற அறிவு இருக்கும். உதாரணமாக, கணிதம், அறிவியல், மருத்துவம், அறுவைசிகிச்சை போன்றவற்றில் நாம் வல்லுநர்களாக இருந்தவர்கள்தான். ஒரு விமானத்தை எப்படி உருவாக்குவது என்றுகூடக் கையேடு வைத்திருந்தோம். ஆனால், பிற்காலத்தில் இதைப் படிக்கும் போது அது நிலையாக இருக்க வேண்டும். அதற்காகவே இப்போது மொழிமாற்றம் செய்யப்பட்டுவருகிறது.

யோகா, தியானத்தின் நற்பலனை மேற்கத்திய நாடுகள் உணரத்தொடங்கி, ஏற்கத்தொடங்கிவிட்டார்கள். ஆனால், நம்நாட்டின் வரலாறு பள்ளிக்கூடங்களில், கல்லூரிகளில் வரலாற்றுப் புத்தகங்களில் முறையாக, தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை.

உண்மையான வரலாற்றை வெளிக்கொண்டுவருவதற்காக சில அறிஞர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள். அறிவியல் ஆதாரங்களுடன் உண்மையான வரலாற்றைப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கற்பிக்கும் முயற்சியை எடுத்து வருகிறோம். அதற்குச் சிறிது காலம் தேவைப்படும்

இவ்வாறு சுப்ரமணியன் சுவாமி தெரிவித்தார்.

இதையும் படிக்க மறந்துடாதீங்க....

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x