2 லட்சம் இந்தியர்கள் வெளிநாடுகளில் குடியேற்றம்

2 லட்சம் இந்தியர்கள் வெளிநாடுகளில் குடியேற்றம்
Updated on
1 min read

புதுடெல்லி: மாநிலங்களவையில் ஆம் ஆத்மி உறுப்பினர் ராகவ் சதா, “இந்திய குடியுரிமையை துறந்துவிட்டு எவ்வளவு பேர் வெளிநாடுகளில் குடியேறியுள்ளனர். அதற்கானகாரணங்கள் என்ன" என்பதுகுறித்து கேள்வியெழுப்பி இருந்தார்.

இதற்கு மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் கீர்த்திவர்தன் சிங் அளித்த எழுத்துப்பூர்வமான பதில்: 2023-ம் ஆண்டில் 2 லட்சத்து 16 ஆயிரத்து 219 பேர் இந்திய குடியுரிமையை வேண்டாம் என துறந்து விட்டு வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்தியர்கள் தங்களது குடியுரிமையை துறப்பது அவர்களது தனிப்பட்ட விருப்பம் சாரந்தது. இன்றைய அறிவுசார் பொருளாதாரத்தில் உலகளாவிய பணியிட திறனை அரசும் அங்கீகரிக்கிறது.வெற்றிகரமான, வளமையான மற்றும்செல்வாக்கு மிக்க புலம்பெயர்ந்தோர் இநதியாவின் சொத்தாக திகழ்கின்றனர். இவ்வாறு அமைச்சர் பதில் அளித்துள்ளார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in