

கர்னூல்: ஆந்திர மாநிலம் சுன்ன பெண்டா எனும் இடத்தில் ‘நம் நீர் - நம் வளம்’எனும் நிகழ்ச்சியில் பங்கேற்று முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது:
எஸ்.சி. உட்பிரிவு இடஒதுக்கீடு குறித்து உச்ச நீதிமன்றம் சிறப்பான தீர்ப்பை வழங்கி உள்ளது. இது வரவேற்கத்தக்கது. இந்த ஜனநாயக நாட்டில் அனைத்து பிரிவினருக்கும் சம நீதி கிடைத்திட வேண்டும் என்பதே தெலுங்கு தேசம் கட்சியின் கொள்கையாகும். அதன் அடிப்படையில்தான் கடந்ததேர்தலில் ‘சீட்’ வழங்கப்பட்டது. இது மக்களின் அரசு. இங்கே நடைபெறுவது மக்களாட்சி. நான் உங்களில் ஒருவன்.
நீர் வளத்துக்கு தெலுங்கு தேசம் கட்சி முக்கியத்துவம் அளித்தது. ஆனால், கடந்த ஜெகன் ஆட்சியில் அதற்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. ராயலசீமாமாவட்டங்களை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வது எனது கடமை. தேர்தலின் போது கொடுத்தஅனைத்து வாக்குறுதிகளையும் நான் கட்டாயம் நிறைவேற்றுவேன். இவ்வாறு அவர் பேசினார்.