

புதுடெல்லி: ஐஏஎஸ் தேர்வில் வென்று புனேவில் பயிற்சி அதிகாரியாக பணியமர்த்தப்பட்ட பூஜா கேத்கர் தனது சொந்த காரில் சைரன் பொருத்தி சென்றார். இவர் பயிற்சியிலேயே பல வசதிகளை கேட்டதால் இவர் குறித்து பல புகார்கள் எழுந்தன. இவர் ஓபிசி இட ஒதுக்கீடு சான்றிதழ், மாற்றுத் திறனாளி சான்றிதழ் சமர்ப்பித்ததிலும் முறைகேடு செய்தது தெரியவந்ததால், இவரதுதேர்ச்சியை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ரத்து செய்தது. இவர் இனிமேல் சிவில் சர்வீஸ் தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டது.
மோசடி வழக்கில் சிக்கியதால் இவர் முன்ஜாமீன் கேட்டு டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த கூடுதல்நீதிபதி தேவேந்தர் குமார் ஜங்காலா, பூஜா கேத்கரின் முன் ஜாமீன்மனுவை நிராகரித்தார். மேலும்யுபிஎஸ்சி தேர்வில் ஓபிசி இடஒதுக்கீடு, மாற்றுத் திறனாளி ஒதுக்கீடுகளை வேறு யாராவது முறைகேடாக பயன்படுத்தினார்களா என்பது குறித்து டெல்லி போலீஸார் விசாரிக்கவும் உத்தரவிட்டார்.