Published : 01 Aug 2024 06:14 AM
Last Updated : 01 Aug 2024 06:14 AM
புதுடெல்லி: நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டை பார்வையிட மக்களவைஎதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் இன்று வயநாடு செல்கின்றனர்.
கேரளாவின் வயநாட்டில் கனமழை காரணமாக கடந்த திங்கள்கிழமை 3 இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 250-ஐகடந்துவிட்டது. எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் நேற்று வயநாடு வர திட்டமிட்டனர். ஆனால்,மோசமான வானிலை நிலவுவதாலும், தொடர் மழை பெய்வதாலும், வயநாடு வரமுடியாது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து அவர்கள் இன்று வயநாடு வந்து, நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திக்க திட்டமிட்டுள்ளனர். மேம்பாடியில் உள்ள அரசு பள்ளி மற்றும் செயின்ட் ஜோசப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களுக்கு சென்றுபாதிக்கப்பட்ட மக்களை அவர்கள் சந்திக்கவுள்ளனர் என்றும், டாக்டர் மூபென் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று காயம் அடைந்த மக்களை அவர்கள் சந்தித்து ஆறுதல் கூறுவார்கள் எனவும் காங்கிரஸ் கட்சிவட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT