மத்திய அரசு விருதுக்காக முதியவர் காத்திருப்பு: கார்கிலில் தீவிரவாதிகள் ஊடுருவலை ராணுவத்துக்கு தெரிவித்தவர்

நாம்கியால்
நாம்கியால்
Updated on
1 min read

டிராஸ்: லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள கார்கில் பகுதியின் ஆர்யன் பள்ளத்தாக்கை சேர்ந்தவர் நாம்கியால் (58). கால்நடை மேய்ப்பவரான இவர், கடந்த 1999-ம் ஆண்டு பாகிஸ்தான் படையினரின் ஊடுருவல் குறித்து உள்ளூர் ராணுவ அதிகாரிகளுக்கு முதன்முதலில் தகவல் கொடுத்தார். இதனால் இந்திய ராணுவ வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். 1999 மே 3-ம் தேதி முதல் ஜூலை 26 வரை நடந்த போரில் பாகிஸ்தான் படையினரை விரட்டியடித்தனர்.

இந்நிலையில் கார்கில் போர் வெற்றி தினத்தின் வெள்ளி விழாடிராஸ் பகுதியில் நேற்று நடை பெற்றது. இதில் நாம்கியால் தனது மகளுடன் கலந்துகொண்டார்.

பின்னர் நாம்கியால் கூறும்போது, “எனது பல்வேறு இழப்புகளுக்கு அரசு நிவாரணம் கொடுத்துள்ளது. ஆனால் பாகிஸ்தானியர்களால் கொல்லப்பட்ட எனது 18 எருமைகளுக்கு நான் இன்னும் இழப்பீடு பெறவில்லை. இதற்காக அனைத்து விவரங்களையும் பஞ்சாயத்து தலைவர் மூலம் கொடுக்க தயாராக இருக்கிறேன்” என்றார்.

ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் கார்கில் போர் வெற்றிதினத்தில் நாம்கியால் கவுரவிக்கப்படுகிறார். என்றாலும் தனக்கு பரந்த அங்கீகாரம் கிடைக்கும் என நம்புகிறார்.

“நான் மாதந்தோறும் உணவுக்காக ரூ.18,000 பெறுகிறேன்.எனக்கு உதவி தேவைப்படும்போதெல்லாம் அதை ராணுவம் கவனித்துக் கொள்கிறது. 25 ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், படைகளுக்கு நான் ஆற்றிய பங்களிப்பிற்காக மத்திய அரசு எனக்கு விருது வழங்கி கவுரவிக்கும் என நம்புகிறேன்” என்றார்.

நாம்கியாலின் மகளும் ஆசிரியையுமான செரிங் டோல்கர் கூறும்போது, “எனது தந்தை எனக்கும் முழு நாட்டுக்கும் ஒரு ஹீரோ. கார்கில் போரின் வெற்றிக்கு அவர் பெரும் பங்காற்றினார். அவர் அரசின் விருதுக்கு தகுதியானவர்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in