Published : 01 May 2018 09:13 AM
Last Updated : 01 May 2018 09:13 AM

லிங்காயத் விவகாரம், ஊழல் உட்பட கர்நாடக காங்கிரஸ் அரசு மீது மஜத சரமாரி குற்றச்சாட்டு

கர்நாடக தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக மதசார்பற்ற ஜனதா தளம் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. இதுதொடர்பாக, அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

சட்டப்பேரவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டே, லிங்காயத் சமூகத்தை தனி மதமாக காங்கிரஸ் அங்கீகரித்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில், கல்வியாளர் களுக்கும், எழுத்தாளர்களுக்கும் பாதுகாப்பு இல்லை. எழுத்தாளர் கல்புர்கி, பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் ஆகியோரின் கொலைகளே இதற்கு சான்று. கர்நாடகாவில் மேற்கொள்ளப்படும் இரும்பு மேம்பாலத் திட்டத்தில் பெரும் ஊழல் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து முதல்வர் சித்தராமையா விளக்கமளிக்க வேண்டும். கர்நாடக அரசின் தலையீடுகளால் மாநிலத்தின் லோக் ஆயுக்தா அமைப்பும் பலவீனப்பட்டுள் ளது.

அரசியல் சாசனம் புறக்கணிக்கப்படுவதாக காங்கிரஸ் தொடர்ந்து கூறி வருகிறது. இன்று தன்னை அரசியல் சாசனத்தின் பாதுகாவலர் போல காட்டிக் கொள்ளும் இதே காங்கிரஸ்தான், அன்றைக்கு அவசர நிலையை பிரகடனப்படுத்தியது. இதனை மக்கள் எளிதில் மறக்க மாட்டார்கள். அதேபோல், பாலி யல் துன்புறுத்தல் விவகாரம் குறித்து பேசவும் காங்கிரஸுக்கு எந்தவிதத் தகுதியும் இல்லை. ஏனெனில், பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான எம்.பி. கே.சி. வேணுகோபாலைதான், கர்நாடக மாநிலத்தின் பொறுப்பாளராக அக்கட்சி நியமித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x