Published : 26 Jul 2024 05:21 AM
Last Updated : 26 Jul 2024 05:21 AM
புதுடெல்லி: குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள தர்பார் மற்றும் அசோக் ஆகிய 2 அரங்குகளின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகை நாட்டின் அடையாளமாக விளங்குகிறது. மொத்தம் 320 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இதில், குடியரசுத் தலைவரின் இல்லம், அலுவலகம், விருந்தினர் அறைகள் மற்றும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளுக்கான அரங்குகள் உள்ளன.
இதில் தர்பார் ஹால் மற்றும் அசோக் ஹால் என 2 முக்கிய அரங்குகள் உள்ளன. இவற்றில் தேசிய விருது வழங்கும் விழா உட்பட பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். இந்த 2 அரங்குகளின் பெயர் மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து குடியரசுத் தலைவர் மாளிகை செயலகம் வெளியிட்ட அறிக்கையில், “இந்திய கலாச்சாரம் மற்றும் நெறிமுறைகளை பிரதிபலிக்கும் வகையில் குடியரசுத் தலைவர் மாளிகையின் சூழலை மாற்ற தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில், குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள மிக முக்கியமான தர்பார் ஹாலை கனதந்திர மண்டபம் என்றும் அசோக் ஹாலை அசோக் மண்டபம் என்றும் பெயர் மாற்ற குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்” என கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT