

புதுடெல்லி: மாநிலங்களவையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்தராய் பேசியதாவது: ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களில் 28 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். பாதுகாப்பு படையினர் சிலரும் உயிரிழந்துள்ளனர். 2019-ல் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்துசெய்யப்பட்ட பிறகு 900 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
தீவிரவாதத்தை பிரதமர் மோடி அரசு துளியும் பொறுத்துக் கொள்ளாது. காஷ்மீரில் சமீபகாலமாக காணப்படும் தீவிரவாதசெயல்பாடுகள் விரைவில் முடிவுக்கு வரும். தீவிரவாதிகள் ஒருபோதும் தங்கள் முயற்சியில் வெற்றிபெற முடியாது. தீவிரவாதிகள் சிறையில் அடைக்கப்படு வார்கள் அல்லது நரகத்துக்கு அனுப்பப்படுவார்கள்.
இவ்வாறு அமைச்சர் நித்யானந்த ராய் கூறினார்.