கார் பானட்டில் ஸ்பைடர்மேன் உடையில் ஆபத்தான பயணம்: வைரல் வீடியோவால் டெல்லி இளைஞர் கைது

கைதானவர்கள்
கைதானவர்கள்
Updated on
1 min read

புதுடெல்லி: டெல்லியில் ஸ்பைடர் மேன் போல உடை அணிந்து கார் பானட்டில் அமர்ந்து சாகசம் செய்த இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து டெல்லி போக்குவரத்து போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் டெல்லியின் துவாரகா பகுதியில் சூப்பர் ஹீரோவான ஸ்பைடர் மேன் போல உடை அணிந்து கார் பானட்டின் மேல் அமர்ந்து சாகசம் செய்த இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர். பரபரப்பாக காணப்படும் அப்பகுதியில், தாறுமாறாக வாகனம் ஓட்டியதாக போலீஸாருக்கு பொதுமக்கள் புகாரளித்துள்ளனர். இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, ஸ்பைடர் மேன் போல உடை அணிந்த நபர் நஜாப்கரில் வசிக்கும் 20 வயதுடைய ஆதித்யா என அடையாளம் காணப்பட்டுள்ளார். மறுபுறம், வாகனத்தை ஓட்டியவர் 19 வயதான கௌரவ் சிங் என அடையாளம் காணப்பட்டார்.

ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல், சீட்பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீஸார் இது குறித்து கூறும்போது, “இத்தகைய பொறுப்பற்ற நடத்தைகளை ஒருபோதும் பொறுத்துக் கொள்ளமுடியாது. குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்து விதிமீறல்கள் ஏதேனும் இருந்தால் உடனடியாகத் தெரிவிக்குமாறு டெல்லி போக்குவரத்துக் காவல் துறை, குடிமக்களைக் கேட்டுக்கொள்கிறது. அதிகபட்சமாக ரூ.26,000 அபராதம் அல்லது சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும்” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in